கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிருவரங்கத்தில் பழமையான ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கீழையூர் வீரட்டனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் குழு கோயில்களில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், உண்டியல் காணிக்கை தொகையும் அதிகரித்ததால் வருமானத்தை கருத்தில் கொண்டு கோவிலின் தரத்தை உயர்த்தினர். இதனையடுத்து கோவிலுக்கான புதிய செயல் அலுவலர் (நிலை-3) பதவி ஏற்படுத்தப்பட்டது. தற்போது புதிய செயலாளராக பாக்கியராஜ் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.