
தஞ்சாவூரில் மாதாகோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவரின் மகன் ஶ்ரீராம் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஶ்ரீராம் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்தற்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார். அதில், நான் பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
இதைப் பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாக புரிந்துக்கொண்டு என்னை அனைவரும் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியரை மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.