செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களை மீட்கப்பட வேண்டும்…  படகுகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும் என்ற வகையிலே  வலியுறுத்துகிறார்கள். கடந்த காலம் 9 படகுகளை கோர்ட்டிலே விடுவித்து விட்டார்கள். இலங்கை கோர்ட்டில் விடுவிச்சுட்டாங்க… ஆனால் அந்த படகுகளை கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த 9 படகுகளை கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள்தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அந்த ஒன்பது படகுகளுக்கான  நிதிகளை நமது மாண்புமிகு முதலமைச்சர் ஒதுக்கி,  அந்த படகுகள் வருவதற்கான நடவடிக்கை எடுத்தாலும்….  ஒன்றிய அரசாங்கம் அதைக் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். 9 படகுகளை மீட்பதற்கான  வழியில்லை. கடந்த காலங்களில் இலங்கை நீதிமன்றம் நம்மிடம் கைப்பற்றிய படகை அங்கே நொறுக்கியுள்ளனர். என்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,

அது மாதிரி படங்களுக்கு தான் மாண்புமிகு தமிழகத்தினுடைய முதலமைச்சர்….. மீனவர்களை காப்பதற்காக அவர்களுக்கு  நாட்டு படகுக்கு 1.50 லட்சம் ரூபாயும்,  விசைப்படகுக்கு 5 லட்சமும் கொடுத்து அவர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.ஆனால் இன்றைக்கு குறிப்பா சொல்ல வேண்டும் என்று சொன்னால்,  130 படகு அங்கேயே கிடக்கு. இந்திய மீனவர்கள் தான்,  நம்முடைய தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசாங்க மறந்து விடுகிறது.

இலங்கைக்கு எந்த நிவாரணம் கொடுத்தாலும்  ஒன்றிய அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் தான் மீட்க முடியும். நாங்க தான் பவர்ல. எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்,  இந்த படகை மீட்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். மீனவர்கள் என்றால் தமிழ்நாடு மீனவர்கள் தானே… தமிழ்நாடு மீனவர்கள் படகு போனா  என்ன  ?  இருந்தா என்ன ?  என்ற நிலையில் யோசிக்கிறாங்களோ,  என்ற எண்ணம் மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது  தெரிவித்தார்.