நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக புதுச்சேரியில் 1-9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின் படி விடுமுறை தொடர்பாக முடிவு எடுப்போம் என்று அவர் கூறினார். மேலும் பொதுத்தேர்வில் சில மாணவர்கள் பங்கேற்காதது ஏன், தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா? (அல்லது) வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது என்று அவர் கூறினார்.