நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில் தமிழ்நாட்டில் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளதால் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை 6613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதனிடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் தற்போது நலமாக இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.