மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை எதிர்க்கட்சிகள் டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை #Vanakkam-Modi என்ற ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வந்தாலும், மீண்டும் பாஜகவினர் வணக்கம்மோடி என்ற ஹேஷ்டேக்கை முதலிடத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

பிரதமர் மோடி தமிழகம் வந்ததையொட்டி #GoBackModi மற்றும் #Vanakkam-Modi என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டுவிட்டரில் மாறிமாறி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது Twitter-ல் “வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக் 10 லட்சம் டுவிட்களை தாண்டி உள்ளது. பிரதமர் மீது இவ்வளவு அன்பை வெளிப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.