தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே மாதத்தில் முடிவுகளானது வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் கணித பாடத்திற்கு 5 மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதாவது, கேள்வித்தாளில் 47(b)-க்கான கேள்வி தவறுதலாக உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த கேள்விக்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்களான 5 மதிப்பெண்கள் அப்படியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.