ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் இதுகுறித்து ஆளுநருக்கு சுப.உதயகுமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் சுப.உதயகுமார் “கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனது மரியாதைக்கு ஊறு விளைவிக்கவே தவறான தகவலை பேசி உள்ளீர்கள். உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது. அது அவதூறின் கீழ் வருகிறது. நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களை திருத்த வேண்டும். இல்லையெனில் சட்டத் தீர்வுகளை நாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்..