நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முட்டை விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக முட்டை விலை 4 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில் தற்போது 30 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை குறைந்தது குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால் சத்துணவுக்கு அனுப்பும் முட்டைகள் சற்று குறைந்துள்ளது. இதனால் முட்டை விற்பனை குறைந்து அதிக அளவு தேக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் விலையை குறைத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் 17 நாட்களுக்கு பிறகு முட்டை விலை குறைந்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.