பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் நிலையில், விமான நிலையத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உதயநிதி போன்ற பலர் வரவேற்றனர். ஆனால் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு வராதது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை பிரதமர் மோடியை வரவேற்க ஏன் வரவில்லை என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கர்நாடகாவில் பாஜக கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை கடந்த பல நாட்களாக கர்நாடகாவில் தங்கியிருக்கும் நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கட்சியின் இறுதி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மத்திய குழு அவரை திடீரென டெல்லிக்கு அழைத்து சென்று விட்டது. அந்த பணிகளை தற்போது அண்ணாமலை டெல்லியில் இருந்து கவனித்து வருகிறார். இதனால்தான் அண்ணாமலையால் பிரதமரை வரவேற்க வர முடியவில்லை. மேலும் தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு செல்லும் பிரதமரிடம் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை அண்ணாமலை கொடுக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.