சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிலர் உள்நோயாளியாக அங்கு இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது திடீரென அந்தப் பெண் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் மது போதையில் அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சல் இட்டுள்ளார். இதை கேட்ட அருகில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து இளைஞரை குடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.