
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா திமுக ஆட்சியில் அதிக கடனை பெற்ற முதன்மை மாநிலமாக சாதனைப்படுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் கடனின் அளவு அதிகரித்துள்ளது. ஆட்சி முடிவதற்குள் 5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைக்க உள்ளது. 1.10 லட்சம் கோடிக்கும் அதிகமான வருமானம் வந்துள்ளது. ஆனால் 3.53 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கியுள்ளது.
இந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார சீர் செய்யப்படும் என்று கூறினர். நிதி வேளாண்மை குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், மது விற்பனை, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மூலம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஆனாலும் மாநிலத்தின் கடன் அளவு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால் எப்படி அடைக்க முடியும். என்னை அமைதிப்படை அமாவாசை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அது அவருக்கு தான் பொருந்தும். அவருக்கான பெயரை அவரே தேடிக்கொண்டார்.
5 கட்சி மாறியவர். தற்போது திமுகவில் உள்ளார், அடுத்து எந்த கட்சியில் இருப்பார் என்று தெரியவில்லை. ஐந்தாண்டுகளில் இரண்டு சின்னங்களில் நின்றுள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டசபையில் கருணாநிதியையும், திமுக நிர்வாகிகளையும் விமர்சித்து பேசினார். சேகர்பாபுவையும் விமர்சித்து பேசியுள்ளார். இவர்கள் அரசியல் வியாபாரிகள், இவர்கள் எங்களை பேசுவதற்கு எந்த உரிமையும் அருகதையும் இல்லை என்று கூறினார்.