பெங்களூரு விதான் சவுதா காவல் எல்லைக்குட்பட்ட ரேடிசன் (Radisson) ஹோட்டலில் தங்கியிருந்த கனடா நாட்டுப் பெண் புகாரில் கூறியுள்ள அதிரடி தகவல்கள் இதோ:

ஹோட்டல் ஸ்பாவில் மசாஜ் செய்துகொண்டிருந்தபோது, அங்கு பணிபுரிந்த தெரபிஸ்ட் அந்தப் பெண்ணிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டுள்ளார். தான் அரை நிர்வாண நிலையில் இருந்தபோது, கதவைத் திறந்து விட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

 இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மசாஜுக்காக அவர் செலுத்திய 10,000 ரூபாயில் 7,000 ரூபாயைத் திருப்பி அளித்துவிட்டு, இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுமாறு கூறியதாகத் தெரிகிறது.

 ஹோட்டல் நிர்வாகத்தின் பதிலில் திருப்தியடையாத அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.