டாஸ்மாக் நிறுவனமானது எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது தொடர்பான தகவலை உரிமை சட்டத்தின் கீழ் வழங்கமறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2017 ஆம் வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட விவகாரங்களில் டாஸ்மாக் வெளிப்படைத்தன்மையுடன் இயக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், வர்த்தக ரகசியம் எனக் கூறி தகவல்களை வழங்க மறுக்கக்கூடாது” என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தது.