சமீபத்திய ஆண்டுகளில், ஆன்லைன் தளங்கள் மூலம் தங்களுக்குப் பிடித்த உணவகங்களில் இருந்து விலைகளை ஒப்பிட்டு உணவுகளை ஆர்டர் செய்யும் போக்கு இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது.  இது உணவகங்களுக்கு உடல் ரீதியாகச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இதனால் அலைச்சல் மிச்சமாவதாக எண்ணி உணவு விநியோக செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். 

மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தங்கள் வீட்டிற்கே இதன் மூலம் வரவழைத்து பெற்று கொள்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் Swiggy Instamart இல் ஒரே நாளில் ரூ 31,748 க்கு ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கியுள்ளார்.

வெங்காயம், ஆணுறைகள், வாழைப்பழங்கள் மற்றும் சிப்ஸ் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை இந்த தளம் கண்டுள்ளது. இது பல்வேறு நுகர்வோர் தேவைகளுக்காக ஆன்லைன் சேவைகளை நம்பியிருப்பதை பிரதிபலிக்கிறது.