இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின்  துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும் என்று மக்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 358 பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கிறது.

ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களையும் இந்த தொற்று பாதிக்கும். அதிலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் சாதாரண காய்ச்சல், சளி என்று அலட்சியம் பார்க்காமல் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். மேலும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயமாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்றும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.