திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் கல்யாணசுந்தரம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவிளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கல்யாணசுந்தரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணசுந்தரத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.