சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறுதிரைப்படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இத்திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யா-42 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகிற 16ம் தேதியன்று காலை 9:05 மணிக்கு வெளியாகுமென படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.