
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 5 சானிடரி நாப்கின் வெண்டிங் இயந்திரம் வைத்துள்ளோம். பெண்கள் இதை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பெண்கள் அனுபவிக்கின்ற சங்கடங்கள்…. பெண்கள் நிறைய இடங்களில் குடும்பத்தில் இதற்காக பணம் கேட்பதற்கு கூட வருத்தப்படுவாங்க. மாச மாசம் இதைக் கேட்கிறதுக்கு சங்கடமா இருக்கு. இல்லனா… பணம் இல்லாம இருக்கு. அவர்களுக்கு அந்த தனிப்பட்ட சுகாதாரம்… நாம அதை Menstrual Hygiene-ன்னு சொல்லுவோம்.
மாதவிடாய் காலங்களில் அவர்கள் சுகாதாரமாக இருப்பதற்காக ஒரு பெண் எம்எல்ஏவாக இருக்கின்ற காரணத்தினால்…. பெண்களுடைய துயரங்களை, பிரச்சனைகளை, புரிந்து கொண்டு இது மாதிரி செயல்படுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. முதல் கட்டமாக ஐந்து மிஷின் வாயிலாக ஒரு சில குறிப்பிட்ட இடங்கள் இதை வைக்கப் போறோம். தொடர்ச்சியாக இந்த வருட ஆறு மாத காலத்திற்குள்ளாக….
முக்கியமாக இடங்களில் எல்லாம் ஒரு வார்டுக்கு குறைந்தது மூன்று இடங்களிளாவது இதை நிறுவ வேண்டும் என்று ஏற்பாடு வைத்திருக்கிறோம். அதையும் இந்த 6 மாத காலத்திற்குள்ளாக செய்து முடிப்போம். இந்த மின் அட்டை வாயிலாக….. எந்தவித சங்கடமும் இல்லாமல்…. யாரையும் எதிர்பார்க்காமல்….. தங்களுக்கு வசதி பட்ட நேரத்தில்… பெண்களுக்கு … அவர்கள் போய் மாதவிடாய் காலத்தில் இந்த சானிடரி பேக்கை எடுத்துக்கலாம். இந்த வசதி இன்று என்னுடைய தொகுதி இளம் பெண்களுக்காக….. ஒரு தீபாவளி பரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக…… இந்த மிஷின்களை இன்றைக்கு நாங்கள் வழங்குகிறோம் என தெரிவித்தார்.
எம்எல்ஏ பண்டுல இதுவரைக்கும் நான் இந்த மெஷினுக்கு கேட்கல… ஏன்னா ஒரு சில இடங்களில் எம்எல்ஏ ஃபண்டு கட்டிடங்களுக்கு தான் கொடுக்கணும் என்கிறார்கள். இந்த மாதிரி இருக்கு. சானிட்டரி வெண்டிங் மெஷினுக்கு இதுவரைக்கும் எம்எல்ஏ ஃபண்ட் யூஸ் பண்ண மாதிரி எனக்கு தெரியல. ஆனால் இது எல்லாம் நாங்க…. எங்களுடைய தன்னார்வ சேவை அமைப்பின் மூலமாகத்தான் இதை நாங்கள் செய்கிறோம்.
இது மட்டுமல்ல… இன்னும் கூட… தொகுதியில் பால் கொடுக்கிறதாகட்டும் அல்லது ஆலயங்களுக்கு எண்ணெய் கொடுக்கிறதாக இருக்கட்டும்…. இதையெல்லாம் எங்களுடைய முயற்சியில்தான் பண்ணிட்டு இருக்கோம். இதுவரைக்கும் எம்எல்ஏ ஃபண்டு இந்த மிஷினுக்காக எல்லாம் நான் யூஸ் பண்ணல என தெரிவித்தார்.