ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள்.

இந்நிலையில் திருப்பதியில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை ரூ. 300 ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானத்தினர் நாளை காலை தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடுகின்றனர். மேலும் பக்தர்கள் www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.