ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட வேறு நபர்கள் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சான்றானது உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த விண்ணப்பத்தில் ஒரு சில தகவல்களை குறிப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக குடும்ப அட்டை எண், குடும்ப அட்டை உறுப்பினர்களின் பெயர், குடும்ப தலைவரின் பெயர், அத்தியாவசிய பொருட்கள் பொங்கல் பரிசு தொகை பெற முடியாததற்கான காரணம், குடும்ப அட்டைதாரரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண், அத்தியாவசிய பொருள் பெற நியமிக்கப்படும் நபரின் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண் போன்ற விவரங்களை அதில் கூற வேண்டும்.
இதனை அடுத்து சான்று என்ற பிரிவில் குடும்ப அட்டைக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு குறிப்பிட்ட நபரை நியமிக்கின்றேன் என (பெயரை குறிப்பிட வேண்டும்) என தெரிவிக்க வேண்டும். மேலும் ஏதேனும் முறைகேடு நடைபெற்றதாக கண்டறியப்பட்டால் என்னுடைய குடும்ப அட்டை அத்தியாவசிய பொருள் பெற முடியாதபடி முடக்கம் செய்யப்படும் என்பதை அறிவேன். என்னுடைய குடும்ப அட்டைக்கு என்னுடைய பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் மூலமாக அத்தியாவசிய பொருள் வழங்கப்படும் என்பதை அறிவேன் என கூறி கையொப்பமிட வேண்டும். இந்த படிவத்தில் வட்ட வழங்கல் அலுவலர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை நியாயவிலை கடைகளில் அளித்து குடும்ப அட்டையில் பெயர் இல்லாத அதேசமயம் அங்கீகரிக்கப்பட்ட சான்று பெற்ற நபர் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.