இமாச்சலப்பிரதேசத்தில் டீசல் மீதான வாட் வரியை ரூ.3 உயர்த்தியும், பெட்ரோல் மீதான வாட் வரியை 55 காசு குறைத்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க வை வீழ்த்தி சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட உடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.