டெஸ்ட் பர்சேஸ் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வணிகர் சங்க அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என விக்ரம ராஜா அறிவித்துள்ளார். அரசு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடவில்லை என்றால் அன்று மாலையே அடுத்த கட்ட போராட்டமாக ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் நாளில் கடை அடைப்பு போராட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.