தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரி கொட்டாய் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான சத்யராஜ் தனது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் சத்யராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சத்யராஜை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.