ஆந்திர மாநிலத்திலிருந்து காளி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு லாரி பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.