பிரான்ஸ் நாட்டில் விண்கல் ஒன்று விழுந்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. அதில் விண்கல் ஒன்று பூமியில் சுற்றுவட்ட பாதையை கடந்து செல்லும்போது புவி ஈர்ப்பு விசையால் கீழே இழுக்கப்பட்டு நிலத்தில் விழுகிறது.

பொதுவாக பூமிக்கு வெளியே இருந்து வரும் எந்த ஒரு பொருளும் அதிகப்படியான புவி ஈர்ப்பு விசை காரணமாக கீழே வரும் வேகத்தில் எரிந்து விடும். அதேபோல இந்த விண்கல்லும் எரிந்து கீழே விழுகிறது. விண்கல் விழுந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மற்றும் உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.