ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் பல நாடுகளும் போரை நிறுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்ப போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது “ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்த இருக்கிறார்கள். எனவே உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ள மேலும் ஆயுதங்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இது குறித்து உக்ரைன் நாட்டின் அதிபர் செலன்ஸ்கியுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அப்போது வான்வழி பாதுகாப்பு மற்றும் பேட்ரியாட் ஏவுகணை போன்றவற்றின் தேவைகள் குறித்து பேசியதாக கூறினார். இதை தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்பு உற்பத்தி மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெர்மனி போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு விமான பாதுகாப்பு அமைப்புகள் வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ரஷ்யாவின் விமான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமானவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்தப் போர் தீவிரமடையலாம் என கூறப்படுகிறது.