
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.