ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, போராட்டம், கூட்டம் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு மாநிலம்  முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.