கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், சமூக நீதி என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல… இந்த உலகத்தில் இரண்டு தான் ஜாதி. ஆண் ஜாதி,  பெண் ஜாதி. அப்ப இரண்டு ஜாதியும் ஒன்றாக இருந்தால் தான் சமூக நீதி. ஒரு ஆணுக்கு எதுவெல்லாம் கிடைக்கிறதோ….. அது பெண்ணுக்கும் கிடைக்கனும்ன்னு சொல்லுறது தான் சமூக நீதி.

அந்த வழியில் செயல்படுவது என்பது தொடர்ச்சியாக…. இந்த இயக்கம் தலைமுறை தலைமுறையாக சிந்தித்துக் கொண்டே வருகிறது…. தமிழ்நாடு முழுக்க  பெண்கள் தொடர்ச்சியாக கலைஞர் நினைவிடத்திற்கு வந்ததற்கான காரணம் என்னவென்றால், அவர்களுக்கு மனதிற்குள் தெரியும்…. இந்த தலைவன் தங்களுக்காக என்னவெல்லாம் செய்தான் என்று….

அதில்  ரொம்ப முக்கியமானது என்னவென்றால், இந்த தமிழ்நாடு….   இந்தியாவில்  எவரிலும் இல்லாத பழக்கமாக…. சொத்துரிமை ஆணுக்கு தான் இருக்கிறது என்ற பொழுது….  இல்லை அது பெண்ணுக்கும் பங்கு இருக்கிறது என்பதை கொண்டு வந்தவர் கலைஞர்… இன்றைக்கு இருப்பதை  போல….. அதற்காக எவரும் நேரடியாக கலைஞருக்கு  பாராட்டு விழா நடத்தவில்லை….

ஆனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும்…..  தனக்கு தன் தந்தையின் சொந்தத்தில் சமபங்கு வருவதற்கான காரணம் கலைஞர் போட்ட கையெழுத்து என்று தெரிந்ததால் தான் அந்த நன்றி உணர்வு….  அன்னைக்கு தான் தமிழகத்திற்கு புரிந்தது…. ஓஹோ…. கலைஞருக்கு இவ்வளவு பெரிய பெண்கள் ஆதரவு இருக்கிறதா ? என்று…  கலைஞருக்கு அதுவரை பெண்கள் ஆதரவு பெரிதாக இல்லை…..

ஆனால்  இன்றைய தலைவராக இருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை என்ன நினைக்கிறேன் என்றால்,  இந்த இடத்தில் MGRயையும் ஒரு படி முந்திவிட்டார் என்று தான் நான் நினைக்கிறேன்….  அது வந்து என்னவென்றால்,  அது ரொம்ப முக்கியமானது….  கலைஞர் உரிமை தொகை மாதம்  ஆயிரம் என  கொடுப்பது…… தமிழ்நாட்டில் கொடுப்பதற்கு பிறகு….. இந்தியாவில் நடைபெறும் எல்லா தேர்தலிலும்….. எல்லா கட்சிகளும்…. கொடுக்கிற வாக்குறுதி…. அதுவே தான்…

ஹைதராபாத்தில் போய் அதேமாரி தான் கொடுக்கிறார்கள்….. மத்திய பிரதேசத்தில்  பாரதிய ஜனதா கட்சி அதே வாக்குறுதி தான் கொடுக்குது…. அங்க  காங்கிரஸ் கட்சி அதே வாக்குறுதி தான் கொடுக்குது… வேறு வேறு பெயரில்….. வருடம் 12000 கொடுப்போம்…. மாதம் 6000 ரூபாய் கொடுப்போம்….. அது பூஎன்று சொன்னால் என்ன ? புஷ்பம் என்று சொன்னால் என்ன ? என பெருமையாக பேசினார்.