SSC JE சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இதற்கான தேர்வுகள் கடந்த வருட நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த பணிக்கான தேர்வின் இறுதி முடிவுகள் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது விண்ணப்பதாரர்களின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை ஜூன் 13 முதல் ஜூன் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை SSCஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் தங்கள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.