தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நேரத்தில் பயணிகளின் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ரயில்வே துறை கவனம் செலுத்தி வருகின்றது. நீங்கள் செல்ல வேண்டிய ரயிலை தவற விட்டால் பதட்டப்பட வேண்டாம். இத்தகைய சூழலில் நீங்கள் அடுத்த இரண்டு நிறுத்தங்கள் தாண்டி உங்கள் ரயிலில் ஏறி தொடர்ந்து பயணிக்க முடியும்.

இந்த வசதியை பயணிகளுக்காக ரயில்வே துறை வழங்குகின்றது. அதனைப் போலவே எதிர்பாராத விதமாக உங்களது பயணம் ரத்தாகி விட்டது என்றால் பணம் வீணாகும் என்ற கவலையும் வேண்டாம் அந்த டிக்கெட்டை வைத்து நீங்கள் வேறு நாளில் பயணம் செய்ய முடியும். அதற்கு உடனடியாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர் இடம் டிக்கெட்டை காண்பித்து மாற்றிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ரயிலில் ஆயிரம் கிலோமீட்டர்ஸ் வரை நீங்கள் பயணம் செய்தால் இடையில் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வசதியையும் ரயில்வே துறை வழங்குகின்றது. இந்த சலுகைகள் மற்றும் வசதிகளை அறிந்து ரயில் பயணத்தை எளிமையாக்கி கொள்ளுங்கள்.