சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களை அலுவலக நேரத்தில் யோகா செய்ய ஒய்வு பிரேக் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யோகா விதிகளைப் பின்பற்றுமாறு பணியாளர் பயிற்சி மற்றும் விவகார அமைச்சகம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனம் செலுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தங்கள் அலுவலக நேரத்தில் நாற்காலியில் யோகா செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த யோக இடைவெளி தொடர்பாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் மத்திய அரசு சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் யோகா இடைவெளியின் போது தாங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உட்கார்ந்தபடியே யோகா செய்வதற்கான வழிமுறையை கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி சுமைக்கு இடையே யோகா பயிற்சி செய்ய தனியாக நேரத்தை ஒதுக்க முடியாது என்பதால் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று கூறபட்டுள்ளது.