இந்தியாவில் மத்திய அரசின் மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு CMS என்ற தேர்வை யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகின்றது. அதன்படி இந்த வருடம் மருத்துவ அலுவலர்கள் 584 பணியிடங்கள், ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அலுவலர் 300 பணியிடங்கள் உட்பட மொத்தம் 1261 காலி பணியிடங்களை கொண்ட தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மே ஒன்பதாம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும் என யுபிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் இணையதளம் மூலமாக தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.