நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கையானது வலுத்து இருக்கிறது. பழைய ஓய்வூதியம் பற்றி ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்திருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய நிதிச் செயலர் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜூன் 9-ம் தேதி தேசிய பணியாளர்கள் கவுன்சில் அலுவலக நிர்வாகிகளுடன் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது பழைய ஓய்வூதியத்தை தவிர்த்து வேறொன்றுக்கும் ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் அளிக்காது என மத்திய அரசு ஊழியர் அமைப்பின் பிரதிநிதி, குழுவிடம் தெளிவாக சொன்னார்.

உத்திரவாதம் இல்லாத NPS திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே திரும்ப பெறுவது தான் இப்பிரச்சனையை தீர்க்க ஒரே வழி. இந்நிலையில் ஊழியர்கள் தரப்பில் வழங்கப்பட்ட குறிப்பாணையின் அனைத்து விஷயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என்று குழுவின் தலைவர் உறுதியளித்தார்.

சில தினங்களுக்கு முன் NPS-ஐ திருத்த அரசாங்கத்தால் குழு அமைக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பணியாளர்கள் அமைப்பின் பிரதிநிதி, குழுவின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பல வாதங்களை முன் வைத்தார். அனைத்து நிலையிலும் NPS ஒழிக்கப்படவேண்டும் எனவும்  உத்தரவாத வருமானம் கொண்ட ஓபிஎஸ்-ஐ மீட்டெடுக்க வேண்டும் எனவும் குழு கூறுகிறது