SSC ஜிடி கான்ஸ்டபிள் தேர்வுக்கான அட்மிட் கார்டை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையில் ஆன தேர்வு பிப்ரவரி 20 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் SSC அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற இணையதள பக்கத்தில் உள் நுழைந்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.