நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மத்திய நிதி சேவைகள் செயலர் விவேக் ஜோஷி, நிதி சேவை துறை மற்றும் இணைய தாக்குதல்கள் குறித்து சிறப்பு கூட்டத்தை நடத்தினார். நாடு முழுவதிலும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.