இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் தோறும் pf பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை ஊழியர்கள் தங்களுடைய அவசர தேவைக்காக பகுதி அளவு பெற முடியும். அதன்படி எந்தெந்த காரணங்களுக்காக பிஎஃப் தொகையை திரும்ப பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிளாட் அல்லது வீடு வாங்கும் போது பிஎஃப் பணத்தை நீங்கள் எடுக்க விரும்பினால் மாத சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு 36 மடங்கு வரை எடுக்க முடியும். ஐந்து ஆண்டுகளாக இபிஎப்ஓ கணக்கில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். அடுத்து மூன்று ஆண்டுகளாக பத்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் இபிஎப்ஓ வீட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் போது மொத்தத் தொகையிலிருந்து 90 சதவீதம் வரை திரும்ப பெற முடியும்.

ஆனால் உங்களுடைய பிஎஃப் பணம் ரூ. 20,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது. அதேசமயம் 15 நாட்களுக்கு மேல் உறுப்பினர்கள் வேலையில்லாமல் இருந்தாலும் இதில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள முழுத் தொகையையும் நீங்கள் பெற முடியும். இதில் ஏழு ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தால் திருமணம் மற்றும் படிப்புக்காக 50 சதவீதம் வரை வட்டியுடன் நீங்கள் திரும்ப பெறலாம்.