இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது போல வங்கி சேவைகளை பெறுவதற்கு பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். இத்தகைய பான் கார்டை 18 வயது நிறைவடைந்த நபர்கள் மட்டுமல்லாமல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வரை பெறலாம். குழந்தைகளுக்கு கூட இந்த பான் கார்டு முன்கூட்டியே பதிவு செய்து வைக்க முடியும். 18 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் தங்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் உதவியுடன் அவர்கள் சார்பாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அடையாளச் சான்றாக பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை அல்லது இந்திய கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பான் கார்டு பெறுவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் திரையில் தோன்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மைனர் வயது சான்றிதழ் மற்றும் பெற்றோரின் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெற்றோரின் கையொப்பங்களை பிறகு தனியாக பதிவேற்றம் செய்து 17 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

நீங்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் உங்களுடைய ரசீது எண் வழங்கப்படும்.

மேலும் அஞ்சல் அனுப்பப்படும் அதன் பிறகு பதிவு செய்த பதினைந்து நாளில் பான் கார்டு உங்களுக்கு வந்து சேரும்.