பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 118 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை எவ்வாறு கற்பிக்க வேண்டும், கற்றல், கற்பித்தல் துணை கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். மேலும் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், முதுநிலை விரிவுரையாளருமான வசந்தி வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன் கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.