மகாராஷ்டிராவின் காட்கோபர் பகுதியில் மராத்தி மொழி பேசுமாறு வற்புறுத்தப்பட்ட சஞ்சிரா தேவி என்ற பெண்ணுக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மராத்தி பேசாவிட்டால் இந்தியராக இருக்க முடியாது என்ற ரீதியில் அவரது மீது சிலர் வற்புறுத்திய வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.
சஞ்சிரா தேவி தனது வீட்டின் அருகே நின்றபோது, சிலர் வழியைக் மறைத்து நின்றதால், வழிவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும்போது சிலர் மரியாதைக்கேடான வார்த்தைகள் பயன்படுத்தியதுடன், ‘மராத்தியில் பேசு!’ என வற்புறுத்தினார்கள்.
அதற்கேற்ப அவர், “நான் இந்தியர், இந்தியில் பேசுகிறேன்” என்று பதிலளித்துள்ளார். இதற்கும் பதிலாக, “நீ இந்தியர் இல்ல, மகாராஷ்டிராவில் நீ யாரு?” எனக் கேட்டதோடு, “மஹாராஷ்டிரா, மஹாராஷ்டிரா!” என கூச்சலிடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
‘मैं मराठी नहीं बोलूंगी’
मुंबई के घाटकोपर में एक बार फिर भाषा को लेकर विवाद देखने को मिला. घाटकोपर इलाके में रहने वाली संजीरा देवी के साथ मराठी में बोलने का दबाव बनाए जाने का मामला सामने आया है. बताया जा रहा है कि जब संजीरा देवी अपने घर के पास खड़ी थीं, तो रास्ते में कुछ लोग… pic.twitter.com/tzTlv58WXv
— NDTV India (@ndtvindia) July 21, 2025
தகராறு பெருகிய நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தபோதும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் அந்தப் பெண்ணிடம் மராத்தியில் பேசுமாறு வற்புறுத்துவது தெளிவாக காணப்படுகிறது.
இதேபோன்று, மும்பையின் உள்ளூர் ரயில்களில் மராத்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தும் வீடியோவும் இணையத்தில் பரவலாகியுள்ளது. அதில் ஒரு பெண், “உங்களுக்கு இருக்கை வேணும்னா மராத்தியில் பேசணும், இல்லையென்றால் ரயிலிலிருந்து இறங்கணும்!” என்கிறார்.
இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும், மீரா சாலை பகுதியில் மராத்தி பேசாததற்காக ஒரு கடைக்காரர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் பின்னணியில் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா ஊழியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மொழி பாசாங்கு பெயரில் தனிநபர்களின் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்தச் செயல்கள், மக்களிடையே குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அரசாங்கம் மற்றும் காவல்துறை சார்பில் இது போன்ற சம்பவங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
