திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் கூறியதாவது, எந்த ஒரு பூஜையும் வழிபாட்டு முறைகளும் கடவுளுக்கு செய்யும் போது அது கடவுள் மீதான நமது அன்பின் வெளிப்பாடாகும்.
அதற்கு மேல் ஒன்றும் இல்லை. கடவுள் மீது உண்மையான அன்பு என்பது சக மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் சேவை செய்வதில் தான் உள்ளது. மாறாக இதுபோன்ற விவகாரத்தில் இல்லை. இதைவிட முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக பல விவகாரங்கள் உள்ளது என கருத்து தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
