ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகமானது உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பாக இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

அதோடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று தங்களது பணியை புறக்கணித்து உள்ளனர். அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சொத்து வரி விதிப்புக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.