தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றநிலையில் அதன் தொடர்ச்சியாக காஞ்சனா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு வெளியான காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களும் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வெற்றியையும் புகழையும் தேடி கொடுத்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் காஞ்சனா 4 எப்போது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லாரன்ஸ் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. நான் கைவசம் வைத்திருக்கும் படங்களை முடித்துவிட்டு காஞ்சனா 4 படத்தை கண்டிப்பாக இயக்கி நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.