
சென்னையில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒரு அரசியல் கட்சிக்கு பிரதான சாலையில் ஒரு கட்டிடம் மற்றும் 100 அடி கொடிக்கம்பம் மட்டும் போதாது.
நாம் கிராமங்கள் தோறும் கட்சிக்கு தேவையான கட்டிடங்களை கட்டுவோம். ஒரு கட்சியின் கொள்கையை வைத்து எத்தனை பேர் சேர்கிறார்கள். அதனை வைத்து தான் அது பெரிய கட்சியா? இல்லை சிறிய கட்சியா என்பது முடிவு செய்யப்படும். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அதிகாரம் என்பது வழங்கப்படுகிறது.
அவர்களை தலைவராக உருவாக்குவோம். பாஜகவில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம் என்று கூறினார். மேலும் மகன், மாமா, மாப்பிள்ளை தான் தலைவராக முடியும் என திமுக குடும்பத்தை நிர்மலா சீதாராமன் மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார். அதாவது நிர்மலா சீதாராமன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாஜகவில் பதவி வழங்க மாட்டோம் என்று திமுகவை விமர்சித்து தான் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.