துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும்.

ஒரு பெரிய பூகம்பம் அழிக்கக்கூடும் என நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வரும் நிலையில் துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்டது என்றும் அதில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.