உலகையே கலக்கி வரும் Chat GPT-க்கு போட்டியாக வெகுவிரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பயனர்கள் தங்களின் தேடுதல்களை புதுமையான வழியில் நேரடியாக இன்ட்ராக்ட் செய்து பெற முடியும். இது தேடுதலுக்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

google நிறுவனம் சாட் ஜிபிடி மாற்றி உருவாக்கி வருவதாக தகவல் கசிந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உரையாடல் வடிவில் முடிவுகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. எல்.எம்.டி.ஏ லாங்குவேஜ் மாடல் பாட் டயலாக் அப்ளிகேஷன் என இது அறியப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் மெஷின் லேர்னிங் இதனை சொல்லியிருந்தது கூகுள். இந்நிலையில் வெகு விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூகுள் ஊழியர்கள் இதனை வைத்து சோதனை ஓட்டம் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் முதலீடு செய்யப்படும் எனவும் சுந்தர் பிச்சை சொல்லி உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. சாட் ஜி.பி.டி-யின் வருகை கூகுள் உட்பட பல டெக் நிறுவனங்களுக்கு இம்சை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் கூகுளுக்கு மாற்றாக கூட இது இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் கூகுள் இதனை அறிவித்துள்ளது.