6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பிரபல கணினி நிறுவனமான டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கியமான டெக் நிறுவனங்கள் தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது.

இந்த நிலையில் உலக சந்தைகளில் கணினி கணிசமாக குறைந்ததால் 650 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பிரபல கணினி நிறுவனமான டெல் அறிவித்துள்ளது. இது உலக அளவில் உள்ள டெல் பணியாளர்களில் ஐந்து சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் டெல் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற கேள்விக்குறியுடன் இருக்கின்றது என்று நிறுவனத்தின் இணை தலைமை இயக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.