சமூக வலைதளங்களில் லைக்குகளும், பார்வைகளும் பெறுவதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்கின்றனர், சிலர் உயிரையும் பொருட்படுத்துவதில்லை. அப்படியொரு சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. ஒரு பெண் ரீல் எடுக்க முயன்றபோது, தவறுதலாக கீழே விழுந்து இடுப்பு உடையும் அளவுக்கு விழுந்தார்.

இந்த வீடியோ மக்களிடையே பரவியவுடன், உடனடியாக வைரலானது. சமூக வலைதளங்களில் கன்டென்ட் உருவாக்கும் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்து, ட்ரெண்டுகளை பின்பற்றுவதற்காக ஆபத்தான முயற்சிகளை செய்யும் நிலை உருவாகியுள்ளது.

வீடியோவில், ஒரு பெண் மாடியில் கேமராவை அமைத்து, ஆரா ஃபார்மிங் கிட் ஸ்டைலில்(படகு நடனம்) உற்சாகமாக போஸ் கொடுத்து ஆடுகிறார். ஆரம்பத்தில் எல்லாம் சரியாக செல்ல, டான்ஸின் இறுதி பகுதியை முடிக்க முயலும்போது திடீரென விபத்து நேர்கிறது. அவர் நின்றிருந்த ஸ்டூல் எடை தாங்காமல் தடுமாறி உடைகிறது, அடுத்த நொடியில் பெரும் சத்தத்துடன் அவர் கீழே விழுகிறார்.

இந்த வீடியோ X தளம் மூலம் பகிரப்பட்டு, பலரை கவர்ந்துள்ளது. சிலர் இதை வேடிக்கையாக பகிர்ந்து, “ட்ரெண்ட் முடிந்தது” என்று கிண்டலடித்தாலும், பலர் இப்படி புரியாமல் ட்ரெண்டை பின்பற்றுவது ஆபத்து என்று எச்சரித்தனர். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டுமென்பதற்கு சரியான கன்டென்ட் மட்டுமல்ல, எதிர்பாராத தவறுகளும் பேசுபொருளாக மாற்றும் என்பதை உணர்த்துகிறது.