புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் முதிய தம்பதியர் ஷோரூமிலேயே ஆனந்தமாக ஆடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படுத்தி, முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது. இந்த அழகான தருணம் கேமராவில் பதிவாகி, இணையத்தில் பரவி அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும்போது, கனவுகளை நிறைவேற்றுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பது தெளிவாகிறது. இந்த க்யூட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, இதுவரை 3 லட்சம் பேர் லைக்கும், ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து, இப்போதும் ட்ரெண்டில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by AUTOREVIEW | SANJAY & RINKU RAJPUT 🚚🚗 (@autoreview46)

வீடியோவில், முதிய தம்பதியர் ஒரு பளபளக்கும் சிவப்பு நிற புதிய காருக்கு முன் நிற்கின்றனர். முதிய பெண் கையில் காரின் சாவியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அப்போது, அவரது கணவர் திடீரென கார் வாங்கிய மகிழ்ச்சியில் ஆடத் தொடங்க, அவரைப் பார்த்து முதிய பெண்ணும் தன்னை அடக்க முடியாமல் ஆடுகிறார்.

இந்த இனிமையான காட்சி, அவர்களின் உற்சாகத்தையும் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியையும் பறைசாற்றுகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர்கள் நம் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றி, தங்கள் கனவுகளை மறந்தவர்கள்” என்று ஒருவர் உணர்ச்சியுடன் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “இதைப் பார்த்து கண்ணீர் அடக்க முடியவில்லை” என்று கூறினார். இன்னொருவர், “இதயத்தைத் தொட்டுவிட்டது” என்று பதிவிட்டார்.